கங்கைச் சடையாய்முக் கண்ணுடையாய் கட்செவியாம் அங்கச் சுடையாய் அருளுடையாய் - மங்கைக் கொருகூ றளித்தாய் உனைத்தொழுமிந் நாயேன் இருகூ றளித்தேன் இடர்க்கு