கங்கையஞ் சடைசேர் முக்கட் கரும்பருள் மணியே போற்றி அங்கையங் கனியே போற்றி அருட்பெருங் கடலே போற்றி பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ் சுடரே போற்றி சங்கைதீர்த் தருளும் தெய்வச் சரவண பவனே போற்றி