கச்சுக் கட்டி மணங்கட்டிக் காமுகர் கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம் வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும் மண்ணின் கட்டியும் மானும்மு லைக்கட்டிக் கிச்சைக் கட்டிஇ டும்பைஎ னும்சுமை ஏறக் கட்டிய எற்கருள் வாய்கொலோ பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே பெருமை கட்டும் பெருந்தணி கேசனே திருச்சிற்றம்பலம் திருவடி சூட விழைதல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்