கச்சை யிடுவார் படவரவைக் கண்மூன் றுடையார் வாமத்திற் பச்சை யிடுவா ரொற்றியுள்ளார் பரிந்தென் மனையிற் பலிக்குற்றார் இச்சை யிடுவா ருண்டியென்றா ருண்டே னென்றே னெனக்கின்று பிச்சை யிடுவா யென்றார்நான் பிச்சை யடுவே னென்றேனே