கஞ்ச னோர்தலை நகத்தடர்த் தவனே காமன் வெந்திடக் கண்விழித் தவனே தஞ்ச மானவர்க் கருள்செயும் பரனே சாமிக் கோர்திருத் தந்தையா னவனே நஞ்சம் ஆர்மணி கண்டனே எவைக்கும் நாத னேசிவ ஞானிகட் கரசே செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதனே திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே