கஞ்சத்தி லேர்முக மஞ்சத்தி லேர்நடைக் கன்னியர்கண் நஞ்சத்தி லேஅவர் வஞ்சத்தி லேபட்டு நாணுறும்புன் நெஞ்சத்தி லேஅதன் தஞ்சத்தி லேமுக் கணித்தஎன்போல் பஞ்சத்தி லேபிர பஞ்சத்தி லேஉழப் பார்எவரே