கஞ்சனைச் சிரங்கொய் கரத்தனை முன்று கண்ணனைக் கண்ணனைக் காத்த தஞ்சனை ஒற்றித் தலத்தனைச் சைவத் தலைவனைத் தாழ்ந்துநின் றேத்தா வஞ்சரைக் கடைய மடையரைக் காம மனத்தரைச் சினத்தரை வலிய நஞ்சரை இழிந்த நரகரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே