கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே