கடலே அனைய துயர்மிகை யால்உட் கலங்கும்என்னை விடலே அருளன் றெடுத்தாளல் வேண்டும்என் விண்ணப்பமீ தடல்ஏ றுவந்த அருட்கட லேஅணி அம்பலத்துள் உடலே மருவும் உயிர்போல் நிறைஒற்றி யூரப்பனே திருச்சிற்றம்பலம் பெரு விண்ணப்பம் பொது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்