கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன் அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும் அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன் உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன் இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே