கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப் பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச் செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாபக் கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- பிறப்பவம் பொறாது பேதுறல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்