கடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை அவர்தம் பவனிதனை விடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து படுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் உடுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே