கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக் கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும் நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய் நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும் நடுங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே