கடையவனேன் கன்மனத்தேன் கைதவனேன் வஞ்ச நடையவனேன் நாணிலியேன் நாய்க்கிணைஇன் துன்பொழிய உடையவனே உலகேத்தும் ஒற்றிஅப்பா நின்பால்வந் தடையநின்று மெய்குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ
கடையவனேன் வைதகடுஞ் சொன்னினைக்குந் தோறும் உடையவனே யென்னுடைய வுள்ள முருகுதடா