கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே காசிலே ஆசையில் லவன்போல் பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன் பகல்எலாம் தவசிபோல் இருந்தேன் இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே இழுதையிற் றூங்கினேன் களித்து நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே