கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான் சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல் விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம் தொட்டதுநான் துணிந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே