கட்டோ டே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர் பட்டோ டே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர் கொட்டோ டே முழக்கோடே கோலங்காண் கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர் எட்டோ டே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர் எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே