கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்ணிலார் போல்கிடந் துழைக்கும் குணத்தினில் கொடியேன தனக்குநின் அருள்தான் கூடுவ தெவ்வணம் அறியேன் பணத்தினில் பொலியும் பாம்பரை ஆர்த்த பரமனே பிரமன்மல் அறியா வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே திருச்சிற்றம்பலம் நெஞ்சைத் தேற்றல் திருவொற்றியூர் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்