கணத்தில் என்னைவிட் டேகுகின் றவன்போல் காட்டு கின்றனன் மீட்டும்வந் தடுத்துப் பணத்தும் மண்ணினும் பாவைய ரிடத்தும் பரவ நெஞ்சினை விரவுகின் றனன்காண் குணத்தி னில்கொடுந் தாமதன் எனும்இக் கொடிய வஞ்சகன் ஒடியமெய்ப் போதம் உணர்த்து வார்இலை என்செய்கேன் எளியேன் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே