கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன் பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே