கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும் கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும் எண்அடங்காப் பெருஞ்ஸோதி என்இறைவர் எனையே இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார் மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும் மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார் பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே