பாடல் எண் :4218
கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி
எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே
இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி
வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்
பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்
பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே
பாடல் எண் :5721
கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.