பாடல் எண் :888
கண்கள் முன்றினார் கறைமணி மிடற்றார்
கங்கை நாயகர் மங்கைபங் குடையார்
பண்கள் நீடிய பாடலார் மன்றில்
பாத நீடிய பங்கயப் பதத்தார்
ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்
மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ
மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே
பாடல் எண் :1779
கண்கள் களிப்ப வீண்டுநிற்குங்
கள்வ ரிவரூ ரொற்றியதாம்
பண்க ளியன்ற திருவாயாற்
பலிதா வென்றார் கொடுவந்தேன்
பெண்க டரலீ தன்றென்றார்
பேசப் பலியா தென்றேனின்
னெண்கண் பலித்த தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.