கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றவிக்கும் அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் திண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாய நமஎன் றிடுநீறே