கண்ட னேகவா னவர்தொழும் நின்திருக் கழல்இணை தனக்காசை கொண்ட னேகமாய்த் தெண்டன்இட் டானந்தக் கூத்தினை உகந்தாடித் தொண்ட னேனும்நின் அடியரில் செறிவனோ துயர்உழந் தலைவேனோ அண்ட னேதிருத் தணிகைவாழ் அண்ணலே அணிகொள்வேல் கரத்தோனே திருச்சிற்றம்பலம் செழுஞ்சுடர் மாலை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்