கண்ண னோடயன் காண்பரும் சுடரே கந்தன் என்னும்ஓர் கனிதரும் தருவே எண்ண மேதகும் அன்பர்தம் துணையே இலங்கும் திவ்விய எண்குணப் பொருப்பே அம்மை அப்பனே அடியனேன் தன்னைத் திண்ண மேஅடித் தொழும்பனாய்ச் செய்வாய் திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே