கண்ணனை அயனை விண்ணவர் கோனைக் காக்கவைத் திட்டவேற் கரனைப் பண்ணனை அடியர் பாடலுக் கருளும் பதியினை மதிகொள்தண் அருளாம் வண்ணனை எல்லா வண்ணமும் உடைய வரதன்ஈன் றெடுத்தருள் மகனைத் தண்ணனை எனது கண்ணனை அவனைத் தணிகையில் கண்டிறைஞ் சுவனே
கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை கடல்பொங்கு கின்றது வாரீர் உடல்தங்கு கின்றது வாரீர் வாரீர்