கண்ணாறு() படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால் கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில் எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும் பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே