கண்ணினால் உனது கழற்பதம் காணும் கருத்தினை மறந்துபாழ் வயிற்றை மண்ணினால் நிறைத்தல் எனஉண வருந்தி மலம்பெற வந்தனன் அதனால் எண்ணினால் அடங்கா எண்குணக் குன்றே இறைவனே நீஅமர்ந் தருளும் தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே