கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட் கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும் புத்தமுதே ஆனந்த போக மேஉள் எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச் சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ