கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும் காரணகா ரியங்கடந்த கடவு ளேநின் தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன் பெண்ணுடைய மயலாலே சுழல்கின் றேன்என் பேதைமையை என்புகல்வேன் பேய னேனைப் புண்ணுடைய புழுவிரும்பும் புள்ளென் கேனோ புலைவிழைந்து நிலைவெறுத்தேன் புலைய னேனே