கண்ணுண் மாமணி யேஅருட் கரும்பே கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே எண்ணுள் உட்படா இன்பமே என்றென் றெந்தை நின்றனை ஏத்திலன் எனினும் மண்ணுள் மற்றியான் வழிவழி அடியேன் மாய மன்றிதுன் மனம்அறிந் ததுவே திண்ணம் ஈந்தருள் ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே