கண்ணும் மனமுங் களிக்குமெழிற் கண்மூன் றுடையீர் கலையுடையீர் நண்ணுந் திருவா ழொற்றியுளீர் நடஞ்செய் வல்லீர் நீரென்றேன் வண்ண முடையாய் நின்றனைப்போன் மலர்வாய் நடஞ்செய் வல்லோமோ வெண்ண வியப்பா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ