கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும் கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன் என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள் பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள் மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார் வள்ளல்நட ராயர்திரு உள்ளம்அறிந் திலனே