கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக் கருணைமா மழைபொழி முகிலே விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள் மேவிய மெய்ம்மையே மன்றுள் எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே இன்றுநீ ஏழையேன் மனத்துப் புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப் புகுந்தென துளங்கலந் தருளே