கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே