கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய் விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும் பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே