கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார் என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள் பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே