கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில் கருத்தறியாச் சிறுவனைஓர் கடுங்கா னத்தே உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம் ஒருதாய்போல் மாயைஇருள் ஓங்கும் போதின் மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ மதியிலேன் மாழாந்து மயங்க நீதான் வண்மையுற்ற நியதியின்பின் என்னை விட்டே மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே