கண்முதல் பொறியால் மனமுதல் கரணக் கருவினால் பகுதியின் கருவால் எண்முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால் விண்முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவ தரிதென உணர்ந்தோர் அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும் அருட்பெருஞ் சோதிஎன் அரசே