கண்முன் றுறுசெங் கரும்பின்முத் தேபதம் கண்டிடுவான் மண்முன் றுலகும் வழுத்தும் பவள மணிக்குன்றமே திண்முன்று நான்கு புயங்கொண் டொளிர்வச் சிரமணியே வண்முன் றலர்மலை வாழ்மயில் ஏறிய மாணிக்கமே