கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில் கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே