கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே