கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான் பன்னியருக் கருள்புரிந்த பதிஉலக மெல்லாம் படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும் அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும் அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால் என்னியல்போல் பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே