கன்னியர் அளகக் காட்டிடை உழன்ற கல்மனக் குரங்கினேன் தனைநீ அன்னியன் என்றே கழித்திடில் உனக்கிங் கார்சொல வல்லவர் ஐயா என்னியல் அறியேன் நமன்தமர் வருநாள் என்செய்வேன் என்செய்வேன் அந்தோ மன்னிய வன்னி மலர்ச்சடை மருந்தே வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே