கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க் கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி அடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே சென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்புருக்கும் தேனே எங்கும் தன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே