கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ கரைந்துருகி எந்தாய்நின் கருணை கானா தென்னேஎன் றேங்கிஅழும் பாவி யேனுக் கிருக்கஇடம் இலையோநின் இதயங் கல்லோ பொன்னேஎன் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான பூரணமே புண்ணியமே புனித வைப்பே தன்னேரில் தென்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே