கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே கங்குகரை காணாத கடல்போலே வினைகள் நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால் இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல் இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே