கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் அன்பரெலாம் காணக் காட்டும் என்றுடைய நாயகனே எல்லாஞ்செய் வல்லவனே இலங்குஞ் சோதி மன்றுடைய மணவாளா மன்னவனே என்னிருகண் மணியே நின்னை அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணை ஐயா