கமலன் திருமால் ஆதியர்கள் கனவி னிடத்துங் காண்பரியார் விமலர் திருவாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார் அமலர் அவர்தாம் என்மனைக்கின் றணைகு வாரோ அணையாரோ தமல மகன்ற குறப்பாவாய் தனித்தோர் குறிதான் சாற்றுவையே